Friday, September 23, 2016

"இவர்கள் இவ்வளவு தான்" !

" இவர்கள் இவ்வளவு தான்" !

குறிஞ்சியிலும்
முல்லையிலும் மட்டும் அல்ல
மருதத்திலும்
நெய்தலிலும்..எஞ்சியிருக்கும்
பாலையிலும்
..
இன்று பணமே
ப்ரதானம் போலும் !
பணத்தைத் தான்
மென்று தின்கின்றார்கள்
நவ நாகரீக உலகில்.

கொடுத்ததை கேட்ப்பது வேறு
பிடுங்குதல் வேறு வேறுபாடு
அறிவரோ மக்கள்.?
இங்கு இருப்பவருக்கு
எல்லாம் சாத்தியம் என்றால்
இல்லாதவர்களுக்கும் சாத்தியம் !

வசை பேசிய நாக்குகள்
வாழ்த்தும் வேளை வரும்..
அவ்வேளையில் பகிர்தலுக்கு
மனிதம் அற்று ,
மனம் மறித்துக் கிடக்கும்.
பணம் தின்னிப் பேய்களாய் இவர்கள்
அலைகையில், இல்லாதவர்கள் உடல் மண்ணுக்கும் ,உயிரோ உயில் இல்லாததொரு உலகில்,
இறந்தாலும் கூட வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் !
" இவர்கள் இவ்வளவு தான்" !.. என்ற இருமாப்புடன்.
இல்லாதோர் யார் ,இழந்தோர் யார்
சிந்தை தெளிகையில்,
சினமே கொள்வீர்
பற்றியிருந்த பணத்தின் மேல் !

Strange thoughts penned on the 4th Birthday of my darling son,Yuvan.

Monday, July 18, 2016

பிள்ளைகள் பெறு

உடல் வேறு உயிர் வேறு இல்லை
ஈருடல் ஓருயிர் என்றானபின்.
காதலொடு களவி புரிதலும்,இதுவரை
காணாத களிப்பை ,இனி காணுதலும்
கண்டு உணர்ந்த களிப்பை
மறவாதலும் ,மறைத்தே அதனை
ஒருவரோடு ஒருவர் புதுப்பித்தலும்
இதனை காமம் என கூறாமல், சற்றே
வியந்தேன்! உணர்வொடு சொல்லின், களவியில் உணரப்போவது கடவுளை!
நிச்சயம் உரைக்கிறேன்,
நீ உணர்ந்த கடவுள்,உணர்வாய் மீண்டும்.
உன்னைத்தேடி உனது மடியினில்
உன் முலைக்காம்பு முகர்கையிலே !
பெயர் மாறி இருக்கும்..கடவுள் அல்ல ,
உன் குழந்தை என.
இதனை,வேண்டுமென நினைப்பதால் பிழை அல்ல!
வேண்டாமென்றும் நினைப்பாய்
வேளை வரும் வேளையிலே..!
அப்போது,
வேட்கை,இச்சை,மோகம் எதுவாயினும்
துறந்து,வாழ்க்கை துறந்து,
உன்னையே நீ துறந்து,
வாழ்ந்து கொண்டுதானிருப்பாய்.
வாழாமல் இருக்கும் பலருக்கும் ,
வாழ்க்கை ;
பாடம் கற்பித்ததை கற்பித்துக்கொண்டு,
சுற்றம் சூழ்ந்திருப்பினும்,
கடவுளை வேறு பார்வையில் காண
தனித்திருந்து காத்துக்கிடப்பாய்.
அன்று உணர்வாய் மீண்டும்..
தெய்வம் !
உன் உருவில்..உனது அன்பில்.
உன்னை நீ
பெரிதாய் உணராமல் இருக்க,
"தாய்" என்றானபின் உன்னையே தெய்வமாய் உணர்ந்து கொண்டு,
நீயே அவர்கள் தெய்வம் என உன்னையும் உணரச்செய்யும்
உன் பிள்ளைகள்
உனதருகே இருக்க ..
வாழ்த்துக்கள் !

Wednesday, July 13, 2016

இருப்பு நிலையும் இறக்கும்..

இருப்பு நிலையும் இறக்கும்..
இழத்துணிந்தேன் அதுபோல்..
நானும் !!
இறப்பதும் இனிது தான்
இது தான் வாழ்க்கை என்றானபின் !
சொல்லி உணர்த்த ஆளில்லை என்பதால்
சொல்லாமல் இருந்ததும் இல்லை,ஏதும்
உணராமல் இருந்ததும் இல்லை.
இருந்தவர் இறந்தபின்
இருப்பவரும் இறந்தவர் ஆயினர்.
அனைவரும் இருந்தும்,
யாரும் இல்லாததால்,
இவ்விடம் இங்ஙணம்,
இருந்துகொண்டே,நிதமும் இறக்கின்றேன்
நானும்.

Sunday, April 3, 2016

ப்ரஹ்ம்மா

This I write when I think of living a detached life amidst the attachment towards this materialistic world.Going back to the good old college days where I read and learnt many, when reminded of all the Literature classes , I had an urge to translate a few of my favorite 4 lines from the "Brahma" by Emerson.

ப்ரஹ்ம்மா

தொலைவும் மறதியும் என் அருகே
நிழலும் வெயிலும் எனக்கு ஒன்றே
மறைந்த தெய்வங்களும் என் முன்னே
மேலும்,
அவமானம் புகழ் என் முன், சமமான ஒன்றே.

Brahma" is a lyric poem in which the author assumes the persona of the Hindu God Brahma. Emerson completed the poem in 1856, and the Atlantic Monthly published it in 1857.

Brahma

BY RALPH WALDO EMERSON
If the red slayer think he slays,
      Or if the slain think he is slain,
They know not well the subtle ways
      I keep, and pass, and turn again.

Far or forgot to me is near;
      Shadow and sunlight are the same;
The vanished gods to me appear;
      And one to me are shame and fame.

They reckon ill who leave me out;
      When me they fly, I am the wings;
I am the doubter and the doubt,
      I am the hymn the Brahmin sings.

The strong gods pine for my abode,
      And pine in vain the sacred Seven;
But thou, meek lover of the good!
      Find me, and turn thy back on heaven.









Wednesday, March 30, 2016

விளம்பரம்


I am reminded of
" அழகு தன்னை அழகென்று
பரைசாற்றிக்கொண்டால்
அசிங்கமெனப்படுகிறது."
- unknown.

and I write this ..
நம்மை  அசிங்கம் என அசிங்கபட்டவர்கள் உரைப்பதை எண்ணி நாம் அசிங்கப்படதேவையில்லை. யோக்கியமற்றவர் நாம் யோக்கியமில்லை என உரைப்பதால்
நாம் யோக்கியமற்றுப் போவதில்லை.
அவர்கள் தான் உத்தமம் என அவர்கள் உரைத்தால்
அது அவர்கள் உத்தமமின்மை.

Sunday, March 27, 2016

தவறியது நீங்கள் அல்ல..நான் !

அன்பிற்குரிய அப்பா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு
நான் எழுதும் கடிதம்..
உங்கள் பிரியமான
இளைய மகள்.
அம்மா குட்டிப்பொண்ணு
ஒரு முறை அல்ல..
பல முறை ஒலிக்கிறது
உங்கள் குரல்.
“ஒரு முறையேனும்
நின்று பதில் சொல்லேன் அம்மா “...நீங்கள்
கூறியது இப்போது என் நினைவில்.
இங்கும் அங்குமென வீட்டில்
ஓடித்திரிந்த என்னை
எங்கு சென்று அடங்கினாள் ?
இவள் எங்கேயெனத் தேடி வந்து
என் அறைக்கதவு அருகே நின்றதும்
ஓருவழியாய் உறங்கிப்போன எனை,
ஒரு கணம் பார்த்துவிட்டு
“சாப்பிட்டாளா “ சற்றே மெலிந்த குரலில்,   அம்மாவிடம் வினவியதும்
விடாது நான் முயற்சித்த
சமையல் அனைத்தையும்
“அம்மாவை விட நன்றாய் செய்திருக்கிறாயம்மா”
பெருமை பொங்கப் பாராட்டியதும்
வலி என படுத்திருந்தால் ,பிள்ளைக்கு
இத்தைலத்தை முதலில் தேய்த்துவிடு என
என் தாயைப் பணித்ததும்,
அன்று பெரிதாய் கண்டு கொள்ளாதிருந்த எதுவும்,
இன்று பெருமளவு எதிர்ப்பார்த்து ஏமாறுகிறேன்..
நான் செய்த தவறு எதுவாயினும்,
“இப்படி செய்யாமல்
அப்படி செய்திருக்கலாமேயம்மா”
கருத்துக்கள் அனைத்தும் கடியாமல் உரைத்ததும்;
எனக்கு தேவையேயிராது
என்று ஒதுக்கியிருந்தேன்.
இன்றோ, நிறைய கேள்விகள் மனதுள்..உட்க்கார்ந்து பேச நீங்களும் இல்லை
இக்கடிதம் அனுப்பி பதில் காண
விலாசமும் இல்லை.
எப்போதும் எதுவும்
இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும்
சொல்லிச் சென்றீரே..
விளங்கவேயில்லை இப்போது..
நீங்கள் எங்கு சென்று, யார் மனதுள் புகுந்தீரோ
யாருடன் உரையாட நான் ?
நீங்கள் ஏய் என்றதும் ,உங்கள் முன் வந்து நிற்க்கும் என் அம்மையிடமா
நீங்கள் உங்கள் அண்ணனை கண்ட
என் அண்ணனிடமா,இல்லை
நீங்கள் உங்கள்  அக்காவை  
காணும் என் அக்காவிடமா? இப்போதுங்கள் தங்கையின் சாயலையொத்த என்னிடமேவா..?
உங்களோடு உரைக்க..நான்
யாருடன் உரைக்க ?
“ஐயா” என நீங்கள்
பாசமாய் மொழிந்த என் மகனிடமா ?
அனைவரையும் பார்த்துவிட்ட களைப்பில்,இனி
பார்த்து மொழிய நேரமின்றி எங்களைப் பிரிந்து  ..
எங்கு சென்று புகுந்தீரோ ?
புதிதாய்ப் பிறந்தும் ,
பழக வாய்ப்பின்றி
உங்கள் வாய்மொழிக்கு ஏங்கும்
என் அண்ணன் மகளிடமா..?
எங்கே புகுன்றிருப்பினும்...யார் வழியேனும்
மொழியுங்கள் அப்பா, என்னுடன்.ப்ளீஸ்.







Tuesday, March 15, 2016

பள்ளிப் பருவத்தில்..



காலம் சென்று கொண்டே இருக்க  
கண்கள் கலங்கித்தான் போனது..
கல்வியெனும் கடலில்,
மூழ்கிப்போகாமல் ,முங்கி எழுந்து
ஆர்ப்பரிக்கும் அலைகளாக
அவ்வொப்போழ்து அமைதியாக
எங்கு தொடங்கி ...
எங்கு முடிந்தோம் ;
யாருக்கும் தெரியாது.
தண்ணீரோடு தண்ணீராக
நம்முள் நாமே கரைந்து போகிறோம்..
முக்கிய பதவிகளில் சிலர்,
முழு வேளையும் வீடென்று சிலர். 
நினைத்துக்கொண்டு தான்
இருக்கிறோம்.மறந்தும் கூட,
மதிப்பெண்களை அல்ல!
மண்தரையில்..நிலத்தளத்தில்..
மர பெஞ்ச்சில்..தோட்டத்தில்..
பூங்காவில்..பயனித்த
ஒவ்வொரு இடமும்...
வகுப்பறையும், நாம் வெளியே
வெறித்து நோக்கும் தாழ்வாரமும்
ஒரடுக்கு முதல் மூன்றடுக்கு டப்பா முதல்
கை நுழையாததாயினும்,ஒன்றாக நுழைத்து
ஒருவருக்கொருவர் பகிர்ந்தும் ,பரிமாறியும்
போதவில்லையென்று சண்டையிட்டும்
“நாளை  நிறைய  எடுத்துவாவென " கட்டளையிட்டும்,உண்ட 
உணவெல்லாம் உடனே செரித்தது,
நம் கேளிக்கையில்.
மதிப்பெண் வேண்டி அல்ல
மணியடிக்க வேண்டி
நாம் ப்ரார்த்தித்தது
பல கடவுள் அறியும்.
மா மேதைகளாக நாம்
நடந்து வந்த மேடைகள்
பாராட்டை நினையாமல்
பங்கெடுத்தலே போதுமென
மகிழ்ந்திருந்த தருணங்கள்
ஒவ்வொன்றும்,ஒவ்வொரு நொடியும்
நிழலாடுகிறது அத்தனையும்.கண்ணில்!
நிஜம் சொல்ல தூண்டுகிறது: மனதில்
கோடி நன்றி,கேட்க்காமலே கூறுகிறோம்.
தொலை தொடர்பற்ற தூரத்திலிருந்தும்
அனுபவ பாடம் கற்றுத்தந்த ஆசிரியருக்கும்,
எங்கள் தொடர்பை நீட்டிக்கச் செய்த
கைப்பேசிக்கும்...அதன் பயன்பாட்டுக்
கண்டுபிடிப்பாளனுக்கும்.

Tuesday, March 8, 2016

அக்கா


நித்தம் கிளம்பும்
காற்றல்ல
நொடியில் கிளம்பும்
புயல்
எப்போதும் பெய்யும்
மழையல்ல
எப்போதாவது பொங்கும்
வெள்ளம்
சகித்தே வாழ்ந்திருந்தால் நீ
வெறும் பிணம்
சினம் கொண்டு
சீறவேண்டும் இனி தினம்.
கல்லைக் கண்டு
குரைத்து ஓடும்
நாயல்ல..
சீறிப்பாயும்
சிங்கமே.
தீபம் மட்டும் அல்ல
இனிமேல் தீயாகவும்
பொறுமையான
ப்ரியா அல்ல
ப்ரத்தியங்கரா
தேவியாய் !

நின் நடத்தை
நரிக்குத் தெரியாது.
நாவினிக்கப் பேசு
இன்று போல் என்றும்.
நல்லவையல்லாததை
யாருரைத்தால் என்ன
நாவிழக்கச்செய் !


This was written on the International Women's Day Of this year(8.3.2016) ..brooding on the situation of women suffering Domestic Violence .

Sunday, March 6, 2016

கர்ப்பிணி


அர்த்தமற்றதாய் போன
அன்பும் கூட
இன்றியமையாததாய் போகிறது.
கருவில் வளரும்
நம் பிள்ளைக்கென ;
காதலித்தே தீருவேன் உனை
களிப்பில் உன்
கண்கள் கலங்கும் வரை.

நிலையில்லா நிரந்தரம்


நிரந்தரம்  இல்லா உலகில்
திருமணம் எனும் பந்தம்
நிரந்தரம் என நினைத்து
வாழும் முட்டாள்களாக  இல்லாமல்,
முதிர்ந்த மனைவிகளாய்
மாறிவருகிறோம் நாமும்.
இன்னல் என தெரிந்தும்
இடம் வலம் என இல்லாமல்
அனைத்தையும் கொடுத்தோம்.
நம் மூளைக்கு
இடம் வலம்
எல்லாம் ஒன்றே
என்றெண்ணி
முழுதும் கொடுத்தோம்..
இன்றோ,
இனியும் வாழ
இனிதே இருந்த
தருணங்களை மட்டும்
நினைவில் கொண்டோம்.

தருணங்கள்

தருணங்கள் 

எங்கிருந்து வந்தான்
இவன் ?
மற்றொருவன்
என் தந்தையைப் போலவே.
தந்தைக்கு உறவோ ?எனில், எனக்கும் உறவே.
மாமன் நீ ; வரும்நாட்களில்
நான் வளர்ந்த பின்
என்னை ஏந்தப்போவதில்லை
புன்னகைத்துப் பறிமார
புகைப்படங்கள் இதுபோல்
இன்னும் வேண்டும்.
நினைந்து பார்க்க
நிஜமான பொக்கிஷம் தான்.




                                                                                                               

அப்பாவின் நினைவுகளில்...

அப்பாவின் நினைவுகளில்...

சில காட்சிகள்
பல நினைவுகள்..
மறப்பதும் இல்லை
இறப்பதும் இல்லை..
காட்சிகளிலும்
நினைவுகளிலும்
மறைந்திருப்பதும் 
நிறைந்திருப்பதும்
உணர்வுகள் மட்டுமே.



Sunday, February 28, 2016

பார்த்தலும் புரிதலும் பழங்கதை


புரிதல் எங்கு இருக்கவேண்டுமோ
அங்கு எப்போதுமே இருந்ததில்லை..
புரிதல் இருக்குமிடமோ
தொலைதொடர்பு  அற்ற நிலையில்
புதிர் தான் !!
புரிந்துகொள்ளுதல் கடினமெனினும்
புரிதல் போல பாவித்தல்..
புரிவதே இல்லை.

Saturday, February 27, 2016

ப்ளாஸ்டிக் மெல்லும் பசுமாடுகள்



பிறவா குழந்தையும் பசிக்கு
அழுகிறது.தாயின் கர்பத்திலேயே
பார்வை இழக்கிறது.
காணும் இடமெல்லாம் கணிப்பொறி.
கூப்பிடு தூரத்திலிருப்பினும் கைப்பேசி.
குறுந்தட்டில் குறள் பயிலும் சிறுவர்.
காலம் மாறித்தான் போனது
குழந்தைகள் கிறுக்கிப் பார்க்க
காகிதம் தீர்ந்தது.
சிறுதானியம் தின்று
செழித்திருந்தது போய்
உண்ணும் உணவில்
உடலும் மனமும் பலவீனப்பட
பல மருந்துகள்.
வேண்டுமென்று எடுக்கவும் முடியாமல்
வேண்டாமென்று ஒதுக்கவும் முடியாமல்
வாழ வழியின்றி தவிப்போரும்
வாழ விருப்பின்றி திரிவோரும்
வாழ்ந்தும் வாழாமலுமாக திசைமாறினோரும்
வாழ்ந்தே ஆகவேண்டுமென துடிப்போரும்
அப்பப்பா
வாழ்க்கையெனும் இப்பாடம்
பயில பயில
இருப்பதைக்கொண்டு
இருப்பு நிலையடைந்து
இறப்பு நிலை மறந்து
என்னென்னவொ எண்ணங்களை
நினைத்துக்கொண்டிருக்கயிலே..
என்ன தான் சிந்திக்கின்றன
இங்கு நான் பார்க்கும் இந்த
மக்காத குப்பையைத் தின்னும்
இந்த மாடுகள்
பஞ்சகவ்யம் பாழாய்ப்போனது
ப்ளாஸ்டிக் உரமானது.அதுவே
இதன் உணவும் ஆனது..
வாழ்வெனும் பாடம்
அறுஞ்சுவைதான் - நினைவில் மெல்ல
மென்று அசைபோட.
கறவை தீர்ந்த பசுக்கள் அல்ல...
ப்ளாஸ்டிக் தின்றேனும்
பால் புகட்டும்
கோ மாதாக்கள்.

Saturday, February 13, 2016

காதலர் தினம்

Happy Valentine's Day .

என்னை இழந்த பின்னும்,
அளிக்கிறேன் உன்னிடம்
என்னை அழிக்காமல்
அளிப்பதற்க்காகவே
நிறைந்த கனிவோடு
மறந்த காதலை
நினைவுபடுத்த,
நித்தமும்
உன் சித்தம் என்றிருக்க
இரு பிள்ளைகள்,
இரு பக்கம். நான்
இழந்த மதிப்பை
ஈட்டித் தர ,
வளர்ந்து நிற்ப்பர்.
நாளை காதலொடு
அவர்கள் பக்கம்
இரு மகள்களும் !
பெருமிதம் பொங்கி
வியந்தும் உரைக்க
"வாழ்ந்தால்" நம்மைப்போல்
வாழவேண்டும் என்று.
அன்று காண்பேன்
காதலோடு உன் கண்ணை ;
நன்றியும் உரைத்து, அதுவே
நம் "காதல் தினம்" என !

Monday, February 8, 2016

காணாமல் போன காதல்

மனது வலிக்க,
மூளை செயல்பட
விரும்பி வருவதை
ஏற்ப்பதா மறுப்பதா
என்ற கவலையில் தோன்றியது, இது !

உண்மை.
சற்றே வலிக்கிறது நெஞ்சம்.
நிறைவேறாத ஆசைகள்
ஒவ்வொன்றையும் நிறைவேற்றி,
பின் ,நினைத்ததையெல்லாம்
சாதிக்கத்தெரிந்தவள்
என்கையில்..
"மறவாதே மனமே !
கடந்தது கிடக்கட்டும்
கேளிக்கை காண்
என மறவாதே எனை.."
ஒவ்வொரு முறையும்
ஏமாந்து போன மூளை      
பிதற்றுகிறது வலியில் !

Feb8_2016

சேதுபதி
போகலாமா ? என வினவினாய்.
போகிறோம் ; என உரைத்தாய்.பின்,
வருவாயா என ஐயம் உற்றாய்.
உறுதியான ஒன்றை சொல்லிவிட்டு
உறுத்தலாய் பின் ஐயம் எழுந்தால்
உடனே வரும் என் பதிலும்,
உருக்கியே விடும் என் திடம்.
இன்னும்,
உட்பகை இருக்கோ அவ்விடம். ?
மனமின்றி செய்யும்
ஒவ்வொன்றும் ஒரு நொடியும்
வேண்டாம் இவ்விடம்.

நானும் நீயும்

Feb 7 2016 ' Read an article on Whatsapp.
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்..??
=====================
கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

இதை படிக்கையில்..உதித்தது


பாலும் நீருமாய் இருந்தோம்.
இன்றோ..
பொங்கி வழியவும் வழி இல்லை
கொதிநிலை குறைக்கவும்  வழியில்லை.
பாலோ நீரோ..
கலந்துவிட்டோம் ஒன்றென
இனி பிரிவதெப்படி !

வாழ்த்து_Feb. 2.2016

சித்தியின் திருமண நாள்

சித்தியின்  இந்த
சிரிப்புக்கு இன்றும்
என்றென்றும் நீங்கள்
அடிமையாக..
உங்கள் அன்பிற்கு
சித்தி அடிமையாக...
வேண்டி வணங்குகிறேன்
இருவரையும்.

 வாழ்த்துக்கள்.

Pebbles

POETRY by Prof.Jayanthi Rathinavelu.
Pebbles..

Darkness pulling me ...
Its the black river Lethe
Mesmerize the memories to death
Running into the whirls...
To interchange the intricacies
In the crux of conflicts...
Its nothing but saturated suffocation
In the other word its the predominant preoccupation
Flow of thoughts is not recognized
Strange is the space to settle...
Since tossed to the unknown land
With the anguished eyes inside
Doubling my tongue to voice my choice
Spinning spheres around insists
Splashing sound of glass...
The blue bottle of dreams is broken..
Now the debris in different shape
Mumbling images smiled in regrets!
A gulp of water into the throat is
Drowning all these into bloat...
I feel the reality
Hiding daggers in different zones..
Unveil the latent senses..
Numb ball blocked now and then
Conjecture of fear is right.
Boundaries extended...
Compactness of comfort zone is faded..
Blurring the sweet memories....
But the pebbles in beds is still wet in
My stream of consciousness....

பயம் _Jan31 2016

நானாக எதுவும் செய்து, என்னைக்
கொல்லப்போவதில்லை நிச்சயம்.
இறைவனாகப் பார்த்து ,
நீ வாழ்ந்தது போதும்
செத்து மடி என்று,
இவ்வேளை என் சுவாசம் நிறுத்தினால்
"என் பிள்ளைகள்பாவம்..ஓரு வித பயம்"
என்னை கொன்று கொண்டிருக்க
நானோ
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

I couldn't imagine..such imaginations ..but it so happens when life is questionable !

கூழாங்கற்கள்

Feb 1.2016 _Translation of The Pebbles
கண்கள் எனும் கூழாங்கற்கள்

இருள் இழுக்கும் வேளையிலே
மறதி எனும் கருங்கடலிலே
நினைவுகளை மயக்கி
மரணத்தை நினைவுபடுத்தி
மோதல்களின் நடுவிலே
சிக்கல்களை பரிமாற
அங்குமிங்குமாய் சுழன்றுகொண்டிருக்க...
வேறேதுமில்லை.
நிறைவுற்ற மூச்சுத்திணறலோடும்
முதன்மையானதொரு சிந்தனையோடும்
அங்கீகரிக்கப்படாத எண்ணங்கள்
பொங்கிவழிய, புதிதாய்
குடியேறமுடியாததொரு வெளியிடம்,
அறியாததொரு இடத்தில்,
இவ்வாறே சுண்டியெறியப்பட,
கலங்கிய கண்களுடன்
மொழியை இரட்டிப்பாக்கி
கருத்துக்களைக் குரலெழுப்ப நினைக்கயிலே,
சுற்றுகின்ற கோள்களனைத்தும்
சற்றே நின்றது,
தெளித்தெறிந்த சத்தத்தினால்.
நீல வண்ண கனவுகளனைத்தும்
கண்ணாடிக் குப்பியென
உடைந்து விழுந்தது.
நொறுங்கிய சிதறல்கள் ஒவ்வொன்றும்-வெவ்வேறு உருவமும் படிமமும் ஆக
புன்னகைத்து முணுமுணுக்கின்றன
"இழப்பிற்க்கு இரங்கல்கள்" என.
தொண்டையை நனைக்க
விழுங்கிய தண்ணீரோ
நினைவுகளை மூழ்கடித்து
பெருகி ஊதியது, கண்ணீராய்.
மெய்மை உணர்கின்றேன்  இப்போது.
வெவ்வேறு மண்டலங்களில்
மறைந்திருந்த ஆயுதங்கள்
ஒவ்வொன்றும் திரைநீக்கி வெளிவரச்செய்தது
மறைந்துகிடந்த உணர்வுகளை.
உணர்வற்ற பந்துகளாய்
இப்போதும் அவ்வப்போதும்
தடைபட்டுக்கிடக்க,
அச்சத்தின் அனுமானங்கள் சரிதான்.
எல்லைகள் நீட்டிக்கப்பட,
இன்பநிலையின் இறுக்கமும் தேய்வுற்று
இனிமையான நினைவுகளை மங்கச்செய்தது
படுக்கையில் இந்த கூழாங்கற்கள் மட்டும் இன்னும் நனைந்தேகிடக்கின்றது,
என் உணர்வென்னும் ஓடையிலே.

Wednesday, January 27, 2016

வாழ்க்கை நியதி



ஆழ்கடலும் தன் தாகம் தீர்க்க,
தன் நீர் அருந்தியதில்லை.
மரங்களும் தன் பசி தீர்க்க,
அதன் பழங்கள் புசித்ததில்லை.
ஆதவனோ தனக்கென உதிக்கவும் இல்லை.
பூக்களும், தான் மணக்க, மணம் வீசவில்லை.
சுற்றமும் சூழலும் சுகம் காண
அதன் அதன் கடமையை செவ்வெனே
செய்து முடிக்க, ஏதும் தடுத்ததும் இல்லை.
"உறவுகளுக்காக வாழ்வதுதான் இயற்கை நியதி."
அது சரி..
உன் இயற்கை குணம் இழந்து வாழ் எனில்,
ஆழ்கடலும் ஆர்ப்பரிக்கும், சுனாமி என
மரங்களும் காய்ந்து கிளம்பும், எரியும் காட்டுத்தீ என
சூரியனும் சுட்டெரிப்பான், வெப்பத்தில் மடி என
பூக்களும் மணம் மாறும் கொடிய விஷம் என
நியதிகள் என்றும் மாறுவதில்லை.உண்மை.
இயற்கை குணமிழந்து வாழ் எனில்,
உடைவது  அதன் நியதி மட்டும் அல்ல,
எனதும் தான்.
"உறவுகளுக்காக மட்டுமே வாழ்க்கை இல்லை
உனக்காகவும் தான் ! "

Monday, January 11, 2016

பிள்ளைகள்


மனம் கணத்து
காலம் தள்ளுகிறேன்,
ஒவ்வொரு நொடியும்.
அவ்வப்பொழுதே மெய்சிலிர்க்கிறேன்.
கணத்த மனமும்
காணாமல் போகிறது,
எங்கோ மேலே...
என்னை வளர்க்கவே தான்
என் பிள்ளைகள் !

Wednesday, January 6, 2016

கதையோ கவிதையோ

ஊர் சென்று திரும்பவில்லை கணவர்
இன்னும் ஏன் வரவில்லை அப்பா " என மகன்
ஐந்தாம் தேதி  வருவாரப்பா என நான்
இன்றா அம்மா தேதி  ஐந்து ?
நாளை யா ?
இன்னும் நாட்கள் இருக்கப்பா ..
இன்று தான் தேதி ஒன்று...
தினமும் ஹாப்பி டுடே என சொல்வாயே..
அதுபோல் இன்று ஹாப்பி நியூ யியர் என்று எல்லாருக்கும் சொல்-இது நான்
எப்போ அம்மா அப்பா வருவாங்க-இது மகன்.
இன்னும் நான்கு நாட்கள் இருக்கே தங்கம்..
ஓ கே..அப்போ எந்த நாளைக்கு அம்மா..
இந்த கேரென்டர்ர காமிங்க..
பிஞ்சு விரல்கள் சுட்டியது நாள்காட்டியை.
இதோ..இந்த நாள்
அப்பா வந்திடுவார் - ஐந்தை குறியிட்டு
கைகளால் ஒரு வளையம் வரைந்தது
எனது விரல்.
தினமும் தொடர்ந்தது ..
மகனின் கேள்வியும்
எனது பதிலும்..
அப்பா வருவது இன்றைக்கா இன்றைக்கா என
வினவிய அடுத்தடுத்த நாட்களில்
இன்றல்ல ப்பா நாளை நாளை என்றே சொல்லிவைத்தேன்
என் நாவு வலிக்க.
ஐந்தாம் தேதியும் வந்தது
அதோடு எனக்கு திருப்தியும் வந்தது
இன்று தான் தேதி ஐந்து, அப்பா
வந்துவிடுவாரப்பா என நான் சொல்ல..
துள்ளி எழுந்தவன் கட்டி அணைத்து கேட்டான் என்னை
அப்போ .."இன்றைக்கு" தான்  "நாளைக்கா" அம்மா ?!