Tuesday, November 10, 2009

If u ever want to succeed in life,be as sure as DEATH !






Concept of a grass - Sprouting like the grass is Success!
U can destroy me,but can't defeat me, unless i accept it as defeat !

புல் என்று நினைத்துப்
பிடுங்கித்தான் போடுவார்கள்,
பிடிவாதமாய் வளர்ந்தே விடுவேன்!
நான் கிள்ளி எறியும்
கிளை அல்ல. கலை வளர்த்த
காதலன்.

Man cannot be defeated ,unless he accepts his defeat !



நல்லதொரு செய்தி கேட்டேன் !


December 04 '2003 - July 22nd'2003

எங்கள் வீட்டுச்
சூரியன் உதித்த
முதற் விடியல் , - ஸ்ரீ மஹாலக்ஷ்மி .

தியாகிகள்


மானுடம்
பெரிதென
நினைப்பவனுக்கு ,
மரணம் - ஓர் நான்கெழுத்து
நற்சொல்தான் !

மரணம்

உன் முத்தத்தின்
வலிமை அறிந்தேன் .
பேதம் பாராமல்
உன் பாசக்கயிற்றில் ,
அனைவரையும் அணைத்து,
அளிக்கும் அருமை !

பைத்தியக்காரர்கள் நாங்கள் !


வாழ்வதே பிழை எனும்போது ,
பிழைக்கத்தெரியாமல்,
வாழ விழையும் ,
வலிமை படைத்தவர்கள் !

Why so sensitive ,lady..? No matter how dark the night is,the sun always rises again .

கால்கள் கடக்கின்ற
பாதைகளில்..
கல்லும்,முள்ளும்
கண்ணில் படுவது சகஜம் !
கண்டும் காணாதது போல்
கவனமாய் கடக்கிறாய் ,,,
வழிகளில் மட்டும் !

வாழ்வினில் மட்டும் பின் ஏன்
இந்தத் தயக்கம் ?

வருத்தம் தருபவர்களை எண்ணி ,
நீ வருந்துவதால் ,
வசந்தத்தை தருவார்கள்
என்று என்ன நிச்சயம் ?

அவர்கள் வாழ்த்தவோ ,
நீ வருந்தவோ ,அவர்கள்
உன் வாழ்க்கை அல்ல.

மற்றும்...ஓர் வினாப் பொருள் ?! அவ்வளவே.


Sunday, November 8, 2009

சிந்தனை செய்


கொண்டும் வந்ததில்லை ,
எடுத்தும் போவதில்லை ,
இடைப்பட்ட காலத்தில்
எதற்கிந்த பேராசை ? இல்லை ..
ஆசை ! ஆசை தான் அழிவுக்குக் காரணமாம் ?
உண்மை .முற்றிலும் உண்மை.

நானே எனக்கு வேண்டாமெனில் ,
வேறொன்றுமே வேண்டாம்.

நான்,எனது,எனக்கு எனும்போது ,
எல்லாமும் வேண்டும்.

Friday, November 6, 2009

நான் வேண்டுவது உறவுகள்..












தனிமையின் துயர்
தானாக சிந்திக்க வைக்கும்
தன்னைப் பற்றிய
இயலாமை ,இன்னல்கள் ,
இன்னும் என்னென்னவோ ...

இனி ஒருபோதும்
வேண்டாத இத்தனிமை,
வேண்டியது ....
இனிதே வாழ ,
இன்னும் இன்னும் ,
உறவுகள் மட்டுமே !