Wednesday, January 6, 2016

கதையோ கவிதையோ

ஊர் சென்று திரும்பவில்லை கணவர்
இன்னும் ஏன் வரவில்லை அப்பா " என மகன்
ஐந்தாம் தேதி  வருவாரப்பா என நான்
இன்றா அம்மா தேதி  ஐந்து ?
நாளை யா ?
இன்னும் நாட்கள் இருக்கப்பா ..
இன்று தான் தேதி ஒன்று...
தினமும் ஹாப்பி டுடே என சொல்வாயே..
அதுபோல் இன்று ஹாப்பி நியூ யியர் என்று எல்லாருக்கும் சொல்-இது நான்
எப்போ அம்மா அப்பா வருவாங்க-இது மகன்.
இன்னும் நான்கு நாட்கள் இருக்கே தங்கம்..
ஓ கே..அப்போ எந்த நாளைக்கு அம்மா..
இந்த கேரென்டர்ர காமிங்க..
பிஞ்சு விரல்கள் சுட்டியது நாள்காட்டியை.
இதோ..இந்த நாள்
அப்பா வந்திடுவார் - ஐந்தை குறியிட்டு
கைகளால் ஒரு வளையம் வரைந்தது
எனது விரல்.
தினமும் தொடர்ந்தது ..
மகனின் கேள்வியும்
எனது பதிலும்..
அப்பா வருவது இன்றைக்கா இன்றைக்கா என
வினவிய அடுத்தடுத்த நாட்களில்
இன்றல்ல ப்பா நாளை நாளை என்றே சொல்லிவைத்தேன்
என் நாவு வலிக்க.
ஐந்தாம் தேதியும் வந்தது
அதோடு எனக்கு திருப்தியும் வந்தது
இன்று தான் தேதி ஐந்து, அப்பா
வந்துவிடுவாரப்பா என நான் சொல்ல..
துள்ளி எழுந்தவன் கட்டி அணைத்து கேட்டான் என்னை
அப்போ .."இன்றைக்கு" தான்  "நாளைக்கா" அம்மா ?!

No comments: