Monday, February 8, 2016

கூழாங்கற்கள்

Feb 1.2016 _Translation of The Pebbles
கண்கள் எனும் கூழாங்கற்கள்

இருள் இழுக்கும் வேளையிலே
மறதி எனும் கருங்கடலிலே
நினைவுகளை மயக்கி
மரணத்தை நினைவுபடுத்தி
மோதல்களின் நடுவிலே
சிக்கல்களை பரிமாற
அங்குமிங்குமாய் சுழன்றுகொண்டிருக்க...
வேறேதுமில்லை.
நிறைவுற்ற மூச்சுத்திணறலோடும்
முதன்மையானதொரு சிந்தனையோடும்
அங்கீகரிக்கப்படாத எண்ணங்கள்
பொங்கிவழிய, புதிதாய்
குடியேறமுடியாததொரு வெளியிடம்,
அறியாததொரு இடத்தில்,
இவ்வாறே சுண்டியெறியப்பட,
கலங்கிய கண்களுடன்
மொழியை இரட்டிப்பாக்கி
கருத்துக்களைக் குரலெழுப்ப நினைக்கயிலே,
சுற்றுகின்ற கோள்களனைத்தும்
சற்றே நின்றது,
தெளித்தெறிந்த சத்தத்தினால்.
நீல வண்ண கனவுகளனைத்தும்
கண்ணாடிக் குப்பியென
உடைந்து விழுந்தது.
நொறுங்கிய சிதறல்கள் ஒவ்வொன்றும்-வெவ்வேறு உருவமும் படிமமும் ஆக
புன்னகைத்து முணுமுணுக்கின்றன
"இழப்பிற்க்கு இரங்கல்கள்" என.
தொண்டையை நனைக்க
விழுங்கிய தண்ணீரோ
நினைவுகளை மூழ்கடித்து
பெருகி ஊதியது, கண்ணீராய்.
மெய்மை உணர்கின்றேன்  இப்போது.
வெவ்வேறு மண்டலங்களில்
மறைந்திருந்த ஆயுதங்கள்
ஒவ்வொன்றும் திரைநீக்கி வெளிவரச்செய்தது
மறைந்துகிடந்த உணர்வுகளை.
உணர்வற்ற பந்துகளாய்
இப்போதும் அவ்வப்போதும்
தடைபட்டுக்கிடக்க,
அச்சத்தின் அனுமானங்கள் சரிதான்.
எல்லைகள் நீட்டிக்கப்பட,
இன்பநிலையின் இறுக்கமும் தேய்வுற்று
இனிமையான நினைவுகளை மங்கச்செய்தது
படுக்கையில் இந்த கூழாங்கற்கள் மட்டும் இன்னும் நனைந்தேகிடக்கின்றது,
என் உணர்வென்னும் ஓடையிலே.

No comments: