Friday, October 9, 2009

Tokyo Teachings

I believe most of the foreigners enjoy listening to Gaijin Invasion’s song ,Adam and Joe go to Tokyo and Teriyaki boyz’ Tokyo Drift Songs..especially the fast and furious …TICK TICK TICK.No wonder I am a big fan too.I’ve really wondered ,if u know how they live in Tokyo !
The fast and furious world with strangers all around,my first day in Japan ,was so interesting .
I got lost in its beauty of humane thoughts overwhelming right from a kid to an elderly grandma in Japan.I was just wondering about people bending and bowing till the knee for everything with a gratitude and smile on the face,saying ” Doamo Arigathoo Gozaimasu “ & “Yuroshiku onigaishimasu.”
“Wakarimasen,” though I was not sure about what they were telling ….
I happened to learn and enjoy the warm greetings of People here.
Thankyou and Please, ofcourse a single word which we often forget to say…but Doamo Arigathoo Gozaimasu & Yuroshiku onigaishimasu is heard all over Japan which is to be truly appreciated .Not only this but also the energetic charm in the people who don’t hesitate anytime to bow for a thankyou and please ,is a great lesson to be practiced and preached world wide.

A stranger is a friend whom we are yet to meet and I understood this after visiting Tokyo.

Thursday, October 8, 2009

இந்தியா


பிச்சைக்காரியானாலும்,
பிள்ளைபெற தவறுவதில்லை.
பிள்ளை பெறாதவளாயினும்,
தத்தெடுக்க முனைவதில்லை.
அடுக்குமாடிகளும் ஆங்காங்கே
கன்றாவிக் குடிசைகளுமாய் ,
அழகாய்த்தான் இருக்கிறது...
என் நாடு.
இவ்வழகை இவர்கள்
அழகென்று பறைசாற்றிக்கொள்ள,
அசிங்கமெனத்தோன்றுகிறதேன் - எனக்கு மட்டும் ?

குழந்தைத் தொழிலாளர்கள்

வறுமையின்
விதைகள்
வேரூன்றி
வளர்ந்துள்ளது.
இதை நீரூற்றி
நிலைநாட்ட
நீடித்துக்கொண்டிருக்கிறது
மக்கள் தொகை !

நாங்கள் .....

வறுமையில் வளர்ந்த
விதைகள்-குழந்தைத் தொழிலாளர்கள்!

Wednesday, October 7, 2009

Life needs compromise,but when life itself is a compromise ; why at all , life ?



எங்கே என் வசந்தம் என்ற நாவலின் தாக்கம் : 2003 ஆம் வருடம் எழுதியது ..


ஆண்மை

புகையில் புழுங்குகிறாய்,
மதுவில் மயங்குகிறாய்,
காமத்தில் களிக்கின்றாய்
மற்றவர் மனதை என்றாவது மதிப்பாயா?
ஆண்மையும் அழகுதான்
பெண்மை எனும்
எரியும் நெருப்பை
அணைக்காதவரை !


திடம்

உறுதி என்பது
உடலில் மட்டும் தானா ?
மனதளவில் ,
தொட்டால் சுருங்கிவிடும்
இலைகள் போல,
இரண்டு எழுத்துச்சொல்தான் ,
ஆண்.


திறம்

கைதேர்ந்த கலைதான்
பெண்களின் அழுகை.
வருத்தங்களை
வெளிப்படுத்த
அரியதொரு ஆயுதம்.
தான் பயன்படுத்தவும்கூட
உரிமையிலயோ ஆணிடம் ?!

காரியவாதிகள்

காரியத்தில்
கண்ணாய் இருப்பதும்
கலைதான் ..
"கண்ணின் கடைப்பார்வை,
காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் இம்மாந்தர்க்கு
மாமலையும் ஓர் கடுகாம்."
கூறியவன் தோற்றான்...!
கண்ணின் கடைப்பார்வை
காதலியர் காட்டிவிட்டால்
காணாது போகும் ,
அவளின் கற்பு. !


கற்பழிப்புதான் , முதல் இறவு!

ஒழுக்கத்தைமட்டுமே
ஒழுங்காகவே
கற்றுவந்தவர்கள்
ஒரே நாளில்
இழப்பது எப்படி ?


மன்னிக்கவும் ...

ஆண்மகனே , உன்னை
மதிக்கவில்லை என்ற
மனச்சோர்வு எதற்கு ?
சந்தர்ப்பங்களை
செயல்கள் ஆக்காமல் ,
சாதனைகளை சார்ந்திருந்தால்
சாமர்த்தியமாக,சமாதானமாக
சரணடைவோம்,நாங்களும்தான் !

வாழ்க்கையில் ,
மாற்றங்கள் அவசியம் !
மாற்றங்கள் மட்டுமே
அவசியமா?
விட்டுக்கொடுத்தல் வேண்டும்தான் .
விட்டுக்கொடுத்தல்கள்
மட்டும்தான் வேண்டுமென்றால்
வாழ்க்கை எதற்கு ?





புன்னகை...

புன்னகைத்து பிரிவை
பரிமாறலாம்,
பிரிவின் சுமை குறைய ;
கண்களுக்குள் கண்ணீரை மறைத்து,
காணும்போதெல்லாம் ,
எனக்காக...
ஒரு புன்னகை...
இனியும் வேண்டும்.


Sunday, October 4, 2009

In the middle of difficulty,lies oppurtunity.


நான் எனக்கு சொல்ல விரும்புவது :

தூண்டில்கள் உனை
துன்புறுத்தலாம்..
வலைகள் உனை
இழுத்துச் செல்லலாம்..
தண்ணீராக மாறி
தப்பித்துக்கொள்!
தங்க மீனாய்த்தான்
இருப்பேன் என
தர்க்கம் செய்யாதே .

பிறப்பும் இறப்பும்


ஒவ்வொரு முறையும்
பிறந்தநாள்
கொண்டாடுகிறாய்,
ஒரு முறையாவது
நினைவில் வைத்துக்கொள்
யாரும் உன்
இறந்தநாளை
கொண்டாடக்கூடாதென்று .

வாழ்வின் தொடக்கம்
ஓர் விபத்துதான்.
வியந்து போக
எதுவும் இல்லை...

விடியலுக்கு ஒரு இரவுபோல்
விரைவில் முடிந்துதான் போகும்.

பள்ளிச் சிறுமியென
பரிவோடே தொடர்ந்தேன் ,

பருவப் பெண்ணென
பயந்தே தொடர்ந்தேன் ,

தேவையற்றதோ திருமணம் ?
தவிப்போடே தொடர்ந்தேன்,

தொடக்கங்கள் பலவாக
தோற்றங்களும் பலவாக,

ஒரு கணம் கொடுங்கள்.

வாழ்வின் விடுமுறைக்கு
விண்ணப்பிக்கமாட்டேன் நானாக

வாழ்த்துக்களுடந்தான் விடைபெறும்
என் வாழ்க்கையும் .