Saturday, October 7, 2017

சுடச் சுட சுவையான பொலீஸ்

கதை சொல் கண்ணா என்றதுமே
நொடியில் கதைத்தான்
கண்ணுறங்கும் வேளையிலே..
கதைச் சொல்லி இளைப்பாறினான்.
மூன்றே வயதான
மாமனிதன் என் மகன்.

காவல் படையிலும் அதன் உடையிலும்
தீராக் காதல் கொண்டவன்.

கதைத் துவக்கம் இப்படி !

ஒரு ஊர்ல ஒரு...

சுடச் சுட

சுவை யாக இருந்தாராம் 

ஒரு பொலீஸ் !

உரக்கச் சிரித்தே  உள்ளத்தின்
உண்மை அன்புணர்ந்தேன்.

உரிச்சொற்கள் உண்டென்றறிந்தும்

பிழைத்திருத்தம் செய்யும்

மனமில்லாமல் !



Anitha'vin Maranam.. NEET


தன்னைத் தானே மன்னிக்க முடியா தருணங்களில்..
பிறரைத் தான் தண்டிக்க இயலா
சூழ்நிலைகளில்..
தன் உணர்வுகளை
பிறர் உணராத
வேளைகளில்..
நேர்மையாய் போரிட நினைத்தும்,
பணமே மொழியென்றானதும்
பேதைக்கு பகைக்க தெரியாததும்
சுயமரியாதையினை இழந்ததும்
உள்நெஞ்சில் உறுதி.
தெய்வம் இருப்பின் ,
எனைக் காணத்தயாரா ?
கடவுளே !
மனிதம் மறிக்கும்.
மரணம் பிறக்கும்.

நன்றியுடன்

எங்கு செல்கிறேன்
எதற்கு செல்கிறேன்
எப்படி செல்கிறேன்
ஏன் என்றே
விளங்காத

வாழ்க்கைப் பயணம்
அழுத்துப்போகும் வேளையில்

என் அருகில்
நானே வந்தமர்ந்து

அழுகையை கூட
அறிந்து உணர்ந்து

விழியின் வழி
வழியும் நீரை
வியக்கிறன் !

வாழ்வு இனிமை தான்..
எதுவரினும் ..ஏக்கமின்றி

"ஏகமாக உணர்ந்து"

வாழ்கயில்.

உணராது உழைக்கையில்
ஒன்றுமே விளங்குவதில்லை.

சற்றே நிதானித்து
என் சுவாசம்
நான் உணரும்
போது தான்

ஓட்டம் வேண்டாம்
உட்கார்ந்து கொள்..

ஆட்டம் வேண்டாம்
அமர்ந்து கொள்.

நடையும் வேண்டாம்
நின்று கொள்.

நன்றி கூற
பல காரணங்கள் !

உயிருள்ள வரை

"உயிர் உணர்ந்து வாழ்ந்தால் "

நன்றி கூற
பல காரணங்கள் !

குறை ஒன்றுமே
இல்லை தான்..

சாகையிலும் கூட
முகத்தினில்
சிரித்த சாயல்.



கணவன்

தவிர்க்க முடியா துன்பமானபோதும்
தொல்லை என்றானபோதும்
என்னுடன் எப்போதும்
ஒட்டிக் கிடக்க என்னில்
நான் விரும்பும் ஒவ்வாமை.
கணவன்.

தோழமை



புதிய நட்பிது
யாரறிவார் ?
பல நாள்
பலத்துடன் 
பகுத்தறிந்து பழகியோரென
பார்ப்பவர் உரைக்க
என் எழுத்தினில்
மட்டுமல்ல,
வரும் வரலாற்றினிலும்,
இடம்பெறலாம் !
எம் பிள்ளைகள்
பாராட்ட வேண்டும்
இந்நட்பு..அவரவர்
பிள்ளையிடத்தில்.