Tuesday, March 15, 2016

பள்ளிப் பருவத்தில்..



காலம் சென்று கொண்டே இருக்க  
கண்கள் கலங்கித்தான் போனது..
கல்வியெனும் கடலில்,
மூழ்கிப்போகாமல் ,முங்கி எழுந்து
ஆர்ப்பரிக்கும் அலைகளாக
அவ்வொப்போழ்து அமைதியாக
எங்கு தொடங்கி ...
எங்கு முடிந்தோம் ;
யாருக்கும் தெரியாது.
தண்ணீரோடு தண்ணீராக
நம்முள் நாமே கரைந்து போகிறோம்..
முக்கிய பதவிகளில் சிலர்,
முழு வேளையும் வீடென்று சிலர். 
நினைத்துக்கொண்டு தான்
இருக்கிறோம்.மறந்தும் கூட,
மதிப்பெண்களை அல்ல!
மண்தரையில்..நிலத்தளத்தில்..
மர பெஞ்ச்சில்..தோட்டத்தில்..
பூங்காவில்..பயனித்த
ஒவ்வொரு இடமும்...
வகுப்பறையும், நாம் வெளியே
வெறித்து நோக்கும் தாழ்வாரமும்
ஒரடுக்கு முதல் மூன்றடுக்கு டப்பா முதல்
கை நுழையாததாயினும்,ஒன்றாக நுழைத்து
ஒருவருக்கொருவர் பகிர்ந்தும் ,பரிமாறியும்
போதவில்லையென்று சண்டையிட்டும்
“நாளை  நிறைய  எடுத்துவாவென " கட்டளையிட்டும்,உண்ட 
உணவெல்லாம் உடனே செரித்தது,
நம் கேளிக்கையில்.
மதிப்பெண் வேண்டி அல்ல
மணியடிக்க வேண்டி
நாம் ப்ரார்த்தித்தது
பல கடவுள் அறியும்.
மா மேதைகளாக நாம்
நடந்து வந்த மேடைகள்
பாராட்டை நினையாமல்
பங்கெடுத்தலே போதுமென
மகிழ்ந்திருந்த தருணங்கள்
ஒவ்வொன்றும்,ஒவ்வொரு நொடியும்
நிழலாடுகிறது அத்தனையும்.கண்ணில்!
நிஜம் சொல்ல தூண்டுகிறது: மனதில்
கோடி நன்றி,கேட்க்காமலே கூறுகிறோம்.
தொலை தொடர்பற்ற தூரத்திலிருந்தும்
அனுபவ பாடம் கற்றுத்தந்த ஆசிரியருக்கும்,
எங்கள் தொடர்பை நீட்டிக்கச் செய்த
கைப்பேசிக்கும்...அதன் பயன்பாட்டுக்
கண்டுபிடிப்பாளனுக்கும்.

No comments: