Wednesday, March 30, 2016

விளம்பரம்


I am reminded of
" அழகு தன்னை அழகென்று
பரைசாற்றிக்கொண்டால்
அசிங்கமெனப்படுகிறது."
- unknown.

and I write this ..
நம்மை  அசிங்கம் என அசிங்கபட்டவர்கள் உரைப்பதை எண்ணி நாம் அசிங்கப்படதேவையில்லை. யோக்கியமற்றவர் நாம் யோக்கியமில்லை என உரைப்பதால்
நாம் யோக்கியமற்றுப் போவதில்லை.
அவர்கள் தான் உத்தமம் என அவர்கள் உரைத்தால்
அது அவர்கள் உத்தமமின்மை.

Sunday, March 27, 2016

தவறியது நீங்கள் அல்ல..நான் !

அன்பிற்குரிய அப்பா,
நீண்ட நாட்களுக்குப் பிறகு
நான் எழுதும் கடிதம்..
உங்கள் பிரியமான
இளைய மகள்.
அம்மா குட்டிப்பொண்ணு
ஒரு முறை அல்ல..
பல முறை ஒலிக்கிறது
உங்கள் குரல்.
“ஒரு முறையேனும்
நின்று பதில் சொல்லேன் அம்மா “...நீங்கள்
கூறியது இப்போது என் நினைவில்.
இங்கும் அங்குமென வீட்டில்
ஓடித்திரிந்த என்னை
எங்கு சென்று அடங்கினாள் ?
இவள் எங்கேயெனத் தேடி வந்து
என் அறைக்கதவு அருகே நின்றதும்
ஓருவழியாய் உறங்கிப்போன எனை,
ஒரு கணம் பார்த்துவிட்டு
“சாப்பிட்டாளா “ சற்றே மெலிந்த குரலில்,   அம்மாவிடம் வினவியதும்
விடாது நான் முயற்சித்த
சமையல் அனைத்தையும்
“அம்மாவை விட நன்றாய் செய்திருக்கிறாயம்மா”
பெருமை பொங்கப் பாராட்டியதும்
வலி என படுத்திருந்தால் ,பிள்ளைக்கு
இத்தைலத்தை முதலில் தேய்த்துவிடு என
என் தாயைப் பணித்ததும்,
அன்று பெரிதாய் கண்டு கொள்ளாதிருந்த எதுவும்,
இன்று பெருமளவு எதிர்ப்பார்த்து ஏமாறுகிறேன்..
நான் செய்த தவறு எதுவாயினும்,
“இப்படி செய்யாமல்
அப்படி செய்திருக்கலாமேயம்மா”
கருத்துக்கள் அனைத்தும் கடியாமல் உரைத்ததும்;
எனக்கு தேவையேயிராது
என்று ஒதுக்கியிருந்தேன்.
இன்றோ, நிறைய கேள்விகள் மனதுள்..உட்க்கார்ந்து பேச நீங்களும் இல்லை
இக்கடிதம் அனுப்பி பதில் காண
விலாசமும் இல்லை.
எப்போதும் எதுவும்
இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும்
சொல்லிச் சென்றீரே..
விளங்கவேயில்லை இப்போது..
நீங்கள் எங்கு சென்று, யார் மனதுள் புகுந்தீரோ
யாருடன் உரையாட நான் ?
நீங்கள் ஏய் என்றதும் ,உங்கள் முன் வந்து நிற்க்கும் என் அம்மையிடமா
நீங்கள் உங்கள் அண்ணனை கண்ட
என் அண்ணனிடமா,இல்லை
நீங்கள் உங்கள்  அக்காவை  
காணும் என் அக்காவிடமா? இப்போதுங்கள் தங்கையின் சாயலையொத்த என்னிடமேவா..?
உங்களோடு உரைக்க..நான்
யாருடன் உரைக்க ?
“ஐயா” என நீங்கள்
பாசமாய் மொழிந்த என் மகனிடமா ?
அனைவரையும் பார்த்துவிட்ட களைப்பில்,இனி
பார்த்து மொழிய நேரமின்றி எங்களைப் பிரிந்து  ..
எங்கு சென்று புகுந்தீரோ ?
புதிதாய்ப் பிறந்தும் ,
பழக வாய்ப்பின்றி
உங்கள் வாய்மொழிக்கு ஏங்கும்
என் அண்ணன் மகளிடமா..?
எங்கே புகுன்றிருப்பினும்...யார் வழியேனும்
மொழியுங்கள் அப்பா, என்னுடன்.ப்ளீஸ்.







Tuesday, March 15, 2016

பள்ளிப் பருவத்தில்..



காலம் சென்று கொண்டே இருக்க  
கண்கள் கலங்கித்தான் போனது..
கல்வியெனும் கடலில்,
மூழ்கிப்போகாமல் ,முங்கி எழுந்து
ஆர்ப்பரிக்கும் அலைகளாக
அவ்வொப்போழ்து அமைதியாக
எங்கு தொடங்கி ...
எங்கு முடிந்தோம் ;
யாருக்கும் தெரியாது.
தண்ணீரோடு தண்ணீராக
நம்முள் நாமே கரைந்து போகிறோம்..
முக்கிய பதவிகளில் சிலர்,
முழு வேளையும் வீடென்று சிலர். 
நினைத்துக்கொண்டு தான்
இருக்கிறோம்.மறந்தும் கூட,
மதிப்பெண்களை அல்ல!
மண்தரையில்..நிலத்தளத்தில்..
மர பெஞ்ச்சில்..தோட்டத்தில்..
பூங்காவில்..பயனித்த
ஒவ்வொரு இடமும்...
வகுப்பறையும், நாம் வெளியே
வெறித்து நோக்கும் தாழ்வாரமும்
ஒரடுக்கு முதல் மூன்றடுக்கு டப்பா முதல்
கை நுழையாததாயினும்,ஒன்றாக நுழைத்து
ஒருவருக்கொருவர் பகிர்ந்தும் ,பரிமாறியும்
போதவில்லையென்று சண்டையிட்டும்
“நாளை  நிறைய  எடுத்துவாவென " கட்டளையிட்டும்,உண்ட 
உணவெல்லாம் உடனே செரித்தது,
நம் கேளிக்கையில்.
மதிப்பெண் வேண்டி அல்ல
மணியடிக்க வேண்டி
நாம் ப்ரார்த்தித்தது
பல கடவுள் அறியும்.
மா மேதைகளாக நாம்
நடந்து வந்த மேடைகள்
பாராட்டை நினையாமல்
பங்கெடுத்தலே போதுமென
மகிழ்ந்திருந்த தருணங்கள்
ஒவ்வொன்றும்,ஒவ்வொரு நொடியும்
நிழலாடுகிறது அத்தனையும்.கண்ணில்!
நிஜம் சொல்ல தூண்டுகிறது: மனதில்
கோடி நன்றி,கேட்க்காமலே கூறுகிறோம்.
தொலை தொடர்பற்ற தூரத்திலிருந்தும்
அனுபவ பாடம் கற்றுத்தந்த ஆசிரியருக்கும்,
எங்கள் தொடர்பை நீட்டிக்கச் செய்த
கைப்பேசிக்கும்...அதன் பயன்பாட்டுக்
கண்டுபிடிப்பாளனுக்கும்.

Tuesday, March 8, 2016

அக்கா


நித்தம் கிளம்பும்
காற்றல்ல
நொடியில் கிளம்பும்
புயல்
எப்போதும் பெய்யும்
மழையல்ல
எப்போதாவது பொங்கும்
வெள்ளம்
சகித்தே வாழ்ந்திருந்தால் நீ
வெறும் பிணம்
சினம் கொண்டு
சீறவேண்டும் இனி தினம்.
கல்லைக் கண்டு
குரைத்து ஓடும்
நாயல்ல..
சீறிப்பாயும்
சிங்கமே.
தீபம் மட்டும் அல்ல
இனிமேல் தீயாகவும்
பொறுமையான
ப்ரியா அல்ல
ப்ரத்தியங்கரா
தேவியாய் !

நின் நடத்தை
நரிக்குத் தெரியாது.
நாவினிக்கப் பேசு
இன்று போல் என்றும்.
நல்லவையல்லாததை
யாருரைத்தால் என்ன
நாவிழக்கச்செய் !


This was written on the International Women's Day Of this year(8.3.2016) ..brooding on the situation of women suffering Domestic Violence .

Sunday, March 6, 2016

கர்ப்பிணி


அர்த்தமற்றதாய் போன
அன்பும் கூட
இன்றியமையாததாய் போகிறது.
கருவில் வளரும்
நம் பிள்ளைக்கென ;
காதலித்தே தீருவேன் உனை
களிப்பில் உன்
கண்கள் கலங்கும் வரை.

நிலையில்லா நிரந்தரம்


நிரந்தரம்  இல்லா உலகில்
திருமணம் எனும் பந்தம்
நிரந்தரம் என நினைத்து
வாழும் முட்டாள்களாக  இல்லாமல்,
முதிர்ந்த மனைவிகளாய்
மாறிவருகிறோம் நாமும்.
இன்னல் என தெரிந்தும்
இடம் வலம் என இல்லாமல்
அனைத்தையும் கொடுத்தோம்.
நம் மூளைக்கு
இடம் வலம்
எல்லாம் ஒன்றே
என்றெண்ணி
முழுதும் கொடுத்தோம்..
இன்றோ,
இனியும் வாழ
இனிதே இருந்த
தருணங்களை மட்டும்
நினைவில் கொண்டோம்.

தருணங்கள்

தருணங்கள் 

எங்கிருந்து வந்தான்
இவன் ?
மற்றொருவன்
என் தந்தையைப் போலவே.
தந்தைக்கு உறவோ ?எனில், எனக்கும் உறவே.
மாமன் நீ ; வரும்நாட்களில்
நான் வளர்ந்த பின்
என்னை ஏந்தப்போவதில்லை
புன்னகைத்துப் பறிமார
புகைப்படங்கள் இதுபோல்
இன்னும் வேண்டும்.
நினைந்து பார்க்க
நிஜமான பொக்கிஷம் தான்.




                                                                                                               

அப்பாவின் நினைவுகளில்...

அப்பாவின் நினைவுகளில்...

சில காட்சிகள்
பல நினைவுகள்..
மறப்பதும் இல்லை
இறப்பதும் இல்லை..
காட்சிகளிலும்
நினைவுகளிலும்
மறைந்திருப்பதும் 
நிறைந்திருப்பதும்
உணர்வுகள் மட்டுமே.