Wednesday, January 27, 2016

வாழ்க்கை நியதி



ஆழ்கடலும் தன் தாகம் தீர்க்க,
தன் நீர் அருந்தியதில்லை.
மரங்களும் தன் பசி தீர்க்க,
அதன் பழங்கள் புசித்ததில்லை.
ஆதவனோ தனக்கென உதிக்கவும் இல்லை.
பூக்களும், தான் மணக்க, மணம் வீசவில்லை.
சுற்றமும் சூழலும் சுகம் காண
அதன் அதன் கடமையை செவ்வெனே
செய்து முடிக்க, ஏதும் தடுத்ததும் இல்லை.
"உறவுகளுக்காக வாழ்வதுதான் இயற்கை நியதி."
அது சரி..
உன் இயற்கை குணம் இழந்து வாழ் எனில்,
ஆழ்கடலும் ஆர்ப்பரிக்கும், சுனாமி என
மரங்களும் காய்ந்து கிளம்பும், எரியும் காட்டுத்தீ என
சூரியனும் சுட்டெரிப்பான், வெப்பத்தில் மடி என
பூக்களும் மணம் மாறும் கொடிய விஷம் என
நியதிகள் என்றும் மாறுவதில்லை.உண்மை.
இயற்கை குணமிழந்து வாழ் எனில்,
உடைவது  அதன் நியதி மட்டும் அல்ல,
எனதும் தான்.
"உறவுகளுக்காக மட்டுமே வாழ்க்கை இல்லை
உனக்காகவும் தான் ! "

No comments: