Sunday, February 28, 2016

பார்த்தலும் புரிதலும் பழங்கதை


புரிதல் எங்கு இருக்கவேண்டுமோ
அங்கு எப்போதுமே இருந்ததில்லை..
புரிதல் இருக்குமிடமோ
தொலைதொடர்பு  அற்ற நிலையில்
புதிர் தான் !!
புரிந்துகொள்ளுதல் கடினமெனினும்
புரிதல் போல பாவித்தல்..
புரிவதே இல்லை.

Saturday, February 27, 2016

ப்ளாஸ்டிக் மெல்லும் பசுமாடுகள்



பிறவா குழந்தையும் பசிக்கு
அழுகிறது.தாயின் கர்பத்திலேயே
பார்வை இழக்கிறது.
காணும் இடமெல்லாம் கணிப்பொறி.
கூப்பிடு தூரத்திலிருப்பினும் கைப்பேசி.
குறுந்தட்டில் குறள் பயிலும் சிறுவர்.
காலம் மாறித்தான் போனது
குழந்தைகள் கிறுக்கிப் பார்க்க
காகிதம் தீர்ந்தது.
சிறுதானியம் தின்று
செழித்திருந்தது போய்
உண்ணும் உணவில்
உடலும் மனமும் பலவீனப்பட
பல மருந்துகள்.
வேண்டுமென்று எடுக்கவும் முடியாமல்
வேண்டாமென்று ஒதுக்கவும் முடியாமல்
வாழ வழியின்றி தவிப்போரும்
வாழ விருப்பின்றி திரிவோரும்
வாழ்ந்தும் வாழாமலுமாக திசைமாறினோரும்
வாழ்ந்தே ஆகவேண்டுமென துடிப்போரும்
அப்பப்பா
வாழ்க்கையெனும் இப்பாடம்
பயில பயில
இருப்பதைக்கொண்டு
இருப்பு நிலையடைந்து
இறப்பு நிலை மறந்து
என்னென்னவொ எண்ணங்களை
நினைத்துக்கொண்டிருக்கயிலே..
என்ன தான் சிந்திக்கின்றன
இங்கு நான் பார்க்கும் இந்த
மக்காத குப்பையைத் தின்னும்
இந்த மாடுகள்
பஞ்சகவ்யம் பாழாய்ப்போனது
ப்ளாஸ்டிக் உரமானது.அதுவே
இதன் உணவும் ஆனது..
வாழ்வெனும் பாடம்
அறுஞ்சுவைதான் - நினைவில் மெல்ல
மென்று அசைபோட.
கறவை தீர்ந்த பசுக்கள் அல்ல...
ப்ளாஸ்டிக் தின்றேனும்
பால் புகட்டும்
கோ மாதாக்கள்.

Saturday, February 13, 2016

காதலர் தினம்

Happy Valentine's Day .

என்னை இழந்த பின்னும்,
அளிக்கிறேன் உன்னிடம்
என்னை அழிக்காமல்
அளிப்பதற்க்காகவே
நிறைந்த கனிவோடு
மறந்த காதலை
நினைவுபடுத்த,
நித்தமும்
உன் சித்தம் என்றிருக்க
இரு பிள்ளைகள்,
இரு பக்கம். நான்
இழந்த மதிப்பை
ஈட்டித் தர ,
வளர்ந்து நிற்ப்பர்.
நாளை காதலொடு
அவர்கள் பக்கம்
இரு மகள்களும் !
பெருமிதம் பொங்கி
வியந்தும் உரைக்க
"வாழ்ந்தால்" நம்மைப்போல்
வாழவேண்டும் என்று.
அன்று காண்பேன்
காதலோடு உன் கண்ணை ;
நன்றியும் உரைத்து, அதுவே
நம் "காதல் தினம்" என !

Monday, February 8, 2016

காணாமல் போன காதல்

மனது வலிக்க,
மூளை செயல்பட
விரும்பி வருவதை
ஏற்ப்பதா மறுப்பதா
என்ற கவலையில் தோன்றியது, இது !

உண்மை.
சற்றே வலிக்கிறது நெஞ்சம்.
நிறைவேறாத ஆசைகள்
ஒவ்வொன்றையும் நிறைவேற்றி,
பின் ,நினைத்ததையெல்லாம்
சாதிக்கத்தெரிந்தவள்
என்கையில்..
"மறவாதே மனமே !
கடந்தது கிடக்கட்டும்
கேளிக்கை காண்
என மறவாதே எனை.."
ஒவ்வொரு முறையும்
ஏமாந்து போன மூளை      
பிதற்றுகிறது வலியில் !

Feb8_2016

சேதுபதி
போகலாமா ? என வினவினாய்.
போகிறோம் ; என உரைத்தாய்.பின்,
வருவாயா என ஐயம் உற்றாய்.
உறுதியான ஒன்றை சொல்லிவிட்டு
உறுத்தலாய் பின் ஐயம் எழுந்தால்
உடனே வரும் என் பதிலும்,
உருக்கியே விடும் என் திடம்.
இன்னும்,
உட்பகை இருக்கோ அவ்விடம். ?
மனமின்றி செய்யும்
ஒவ்வொன்றும் ஒரு நொடியும்
வேண்டாம் இவ்விடம்.

நானும் நீயும்

Feb 7 2016 ' Read an article on Whatsapp.
கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்..??
=====================
கணவன் பால் எனில் அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதை தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒரு வேளை அப்படி தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி ஊற்றி அடுப்பையே அணைத்துவிடும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.

இதை படிக்கையில்..உதித்தது


பாலும் நீருமாய் இருந்தோம்.
இன்றோ..
பொங்கி வழியவும் வழி இல்லை
கொதிநிலை குறைக்கவும்  வழியில்லை.
பாலோ நீரோ..
கலந்துவிட்டோம் ஒன்றென
இனி பிரிவதெப்படி !

வாழ்த்து_Feb. 2.2016

சித்தியின் திருமண நாள்

சித்தியின்  இந்த
சிரிப்புக்கு இன்றும்
என்றென்றும் நீங்கள்
அடிமையாக..
உங்கள் அன்பிற்கு
சித்தி அடிமையாக...
வேண்டி வணங்குகிறேன்
இருவரையும்.

 வாழ்த்துக்கள்.

Pebbles

POETRY by Prof.Jayanthi Rathinavelu.
Pebbles..

Darkness pulling me ...
Its the black river Lethe
Mesmerize the memories to death
Running into the whirls...
To interchange the intricacies
In the crux of conflicts...
Its nothing but saturated suffocation
In the other word its the predominant preoccupation
Flow of thoughts is not recognized
Strange is the space to settle...
Since tossed to the unknown land
With the anguished eyes inside
Doubling my tongue to voice my choice
Spinning spheres around insists
Splashing sound of glass...
The blue bottle of dreams is broken..
Now the debris in different shape
Mumbling images smiled in regrets!
A gulp of water into the throat is
Drowning all these into bloat...
I feel the reality
Hiding daggers in different zones..
Unveil the latent senses..
Numb ball blocked now and then
Conjecture of fear is right.
Boundaries extended...
Compactness of comfort zone is faded..
Blurring the sweet memories....
But the pebbles in beds is still wet in
My stream of consciousness....

பயம் _Jan31 2016

நானாக எதுவும் செய்து, என்னைக்
கொல்லப்போவதில்லை நிச்சயம்.
இறைவனாகப் பார்த்து ,
நீ வாழ்ந்தது போதும்
செத்து மடி என்று,
இவ்வேளை என் சுவாசம் நிறுத்தினால்
"என் பிள்ளைகள்பாவம்..ஓரு வித பயம்"
என்னை கொன்று கொண்டிருக்க
நானோ
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

I couldn't imagine..such imaginations ..but it so happens when life is questionable !

கூழாங்கற்கள்

Feb 1.2016 _Translation of The Pebbles
கண்கள் எனும் கூழாங்கற்கள்

இருள் இழுக்கும் வேளையிலே
மறதி எனும் கருங்கடலிலே
நினைவுகளை மயக்கி
மரணத்தை நினைவுபடுத்தி
மோதல்களின் நடுவிலே
சிக்கல்களை பரிமாற
அங்குமிங்குமாய் சுழன்றுகொண்டிருக்க...
வேறேதுமில்லை.
நிறைவுற்ற மூச்சுத்திணறலோடும்
முதன்மையானதொரு சிந்தனையோடும்
அங்கீகரிக்கப்படாத எண்ணங்கள்
பொங்கிவழிய, புதிதாய்
குடியேறமுடியாததொரு வெளியிடம்,
அறியாததொரு இடத்தில்,
இவ்வாறே சுண்டியெறியப்பட,
கலங்கிய கண்களுடன்
மொழியை இரட்டிப்பாக்கி
கருத்துக்களைக் குரலெழுப்ப நினைக்கயிலே,
சுற்றுகின்ற கோள்களனைத்தும்
சற்றே நின்றது,
தெளித்தெறிந்த சத்தத்தினால்.
நீல வண்ண கனவுகளனைத்தும்
கண்ணாடிக் குப்பியென
உடைந்து விழுந்தது.
நொறுங்கிய சிதறல்கள் ஒவ்வொன்றும்-வெவ்வேறு உருவமும் படிமமும் ஆக
புன்னகைத்து முணுமுணுக்கின்றன
"இழப்பிற்க்கு இரங்கல்கள்" என.
தொண்டையை நனைக்க
விழுங்கிய தண்ணீரோ
நினைவுகளை மூழ்கடித்து
பெருகி ஊதியது, கண்ணீராய்.
மெய்மை உணர்கின்றேன்  இப்போது.
வெவ்வேறு மண்டலங்களில்
மறைந்திருந்த ஆயுதங்கள்
ஒவ்வொன்றும் திரைநீக்கி வெளிவரச்செய்தது
மறைந்துகிடந்த உணர்வுகளை.
உணர்வற்ற பந்துகளாய்
இப்போதும் அவ்வப்போதும்
தடைபட்டுக்கிடக்க,
அச்சத்தின் அனுமானங்கள் சரிதான்.
எல்லைகள் நீட்டிக்கப்பட,
இன்பநிலையின் இறுக்கமும் தேய்வுற்று
இனிமையான நினைவுகளை மங்கச்செய்தது
படுக்கையில் இந்த கூழாங்கற்கள் மட்டும் இன்னும் நனைந்தேகிடக்கின்றது,
என் உணர்வென்னும் ஓடையிலே.