Wednesday, October 7, 2009

Life needs compromise,but when life itself is a compromise ; why at all , life ?



எங்கே என் வசந்தம் என்ற நாவலின் தாக்கம் : 2003 ஆம் வருடம் எழுதியது ..


ஆண்மை

புகையில் புழுங்குகிறாய்,
மதுவில் மயங்குகிறாய்,
காமத்தில் களிக்கின்றாய்
மற்றவர் மனதை என்றாவது மதிப்பாயா?
ஆண்மையும் அழகுதான்
பெண்மை எனும்
எரியும் நெருப்பை
அணைக்காதவரை !


திடம்

உறுதி என்பது
உடலில் மட்டும் தானா ?
மனதளவில் ,
தொட்டால் சுருங்கிவிடும்
இலைகள் போல,
இரண்டு எழுத்துச்சொல்தான் ,
ஆண்.


திறம்

கைதேர்ந்த கலைதான்
பெண்களின் அழுகை.
வருத்தங்களை
வெளிப்படுத்த
அரியதொரு ஆயுதம்.
தான் பயன்படுத்தவும்கூட
உரிமையிலயோ ஆணிடம் ?!

காரியவாதிகள்

காரியத்தில்
கண்ணாய் இருப்பதும்
கலைதான் ..
"கண்ணின் கடைப்பார்வை,
காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் இம்மாந்தர்க்கு
மாமலையும் ஓர் கடுகாம்."
கூறியவன் தோற்றான்...!
கண்ணின் கடைப்பார்வை
காதலியர் காட்டிவிட்டால்
காணாது போகும் ,
அவளின் கற்பு. !


கற்பழிப்புதான் , முதல் இறவு!

ஒழுக்கத்தைமட்டுமே
ஒழுங்காகவே
கற்றுவந்தவர்கள்
ஒரே நாளில்
இழப்பது எப்படி ?


மன்னிக்கவும் ...

ஆண்மகனே , உன்னை
மதிக்கவில்லை என்ற
மனச்சோர்வு எதற்கு ?
சந்தர்ப்பங்களை
செயல்கள் ஆக்காமல் ,
சாதனைகளை சார்ந்திருந்தால்
சாமர்த்தியமாக,சமாதானமாக
சரணடைவோம்,நாங்களும்தான் !

வாழ்க்கையில் ,
மாற்றங்கள் அவசியம் !
மாற்றங்கள் மட்டுமே
அவசியமா?
விட்டுக்கொடுத்தல் வேண்டும்தான் .
விட்டுக்கொடுத்தல்கள்
மட்டும்தான் வேண்டுமென்றால்
வாழ்க்கை எதற்கு ?





1 comment:

vinuarvind said...

வாழட்டும் எதிரிகள்..!!!
எதிரிகள் இல்லையெனில்
நமது பலம் உலகுக்கு தெரிவதில்லை...
கண்முன்னே வாழட்டும் எதிரிகள்,
ஒவ்வொரு வினாடியும் நாம் உயிரோடிருப்பதை நினைவுருத்த..!!
எத்தனை முறை விழுகின்றோமோ
அத்தனை முறை எழுவோம்....!!!
நாம் விழுவது வீழ்வதற்கல்ல,
மீண்டும் எழுவதற்கே, தோல்விகளை
மீண்டு வாழ்வதற்கே....!!!
உலகெல்லாம் நண்பர்கள் இருந்தால்
போர் புரிய முடியாது. உலகெல்லாம்
வாழட்டும் எதிரிகள்...
துணைக்குப் போரிட சில நண்பர்கள் மட்டும் போதும்....
உலகை வெல்வோம்...!!!