Tuesday, August 25, 2009

நிலா

விண்ணுள் சென்று
மறைந்துவிட்டால்
கண்டுகொள்ளாதிருப்பேன்
என நினைத்தாயோ?
நிதமும் உனைக் கண்டு
ரசிப்பதால்,இன்று
என் கண்களுள் அல்லவோ நீ !

LOC - Line of Control


கடலுக்கு
ஓர் மூடி உண்டென்றால்
காற்றுக்கும்
ஓர் வேலி உண்டென்றால்
ஆம் ,எனதன்பிற்கும்
ஓர் எல்லை உண்டு.

காதல்

நம்பிக்கை தான் வாழ்க்கையாம்
எனவே தான் நம்புகிறேன் உனை,
என் வாழ்க்கையென .

ஜனனத்தில் மரணம்

மகவே மண்ணில்
இம்மனிதர்களுடன் வாழ்வது
வசந்தமல்ல என்பதை
ஜனனத்திலேயே அறிந்து
மரணத்தைத் தேடிக்கொண்டாயோ?

மழை


வாழும் மக்களுக்குத்தான்
அழுகத்தெரியும் என்றிருந்தேன்,
வானமே,உனக்குமா ?




மீண்டும் மழை !

மழை அமிழ்தம், அறிவேன் .

அதை அழுகை என

எழுதியதன் நோக்கம் ...

அறியேன் !

பெண்மை



நிச்சயமாக,
குளிரவைக்கும்
நிலவு அல்ல.
சுட்டெரிக்கும்
சூரியன்தான், பெண்மை !

பெண்

இவள் கண்கள்
கவிதையாகலாம்
கவிதைகளைப்போல்
இவள் கற்பனையல்ல !